கோட்டாபய ராஜபக்ச போன்றவரை ஜனாதிபதியாக்க திட்டமிடும் எம்.பிக்கள்
கோட்டாபய ராஜபக்ச போன்ற இன்னொருவரை ஜனாதிபதியாக்க மொட்டு கட்சி உள்ளிட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் திட்டமிடுவதாக கண்டி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று(18.08.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ரணில் விக்ரமசிங்க
“நாட்டிற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கக் கூடியவர் ரணில் விக்ரமசிங்க என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அதற்கு அமையவே துணிச்சலாக முன்வந்து அவரின் வெற்றிக்கு எனது ஒத்துழைப்பை வழங்கி வருகிறேன்.
அது தவிர ஒரு சிலர் கூறுவது போல மதுபானசாலை அனுமதிப்பத்திரமோ வேறு சலுகைகளோ எனக்குக் கிடைக்கவும் இல்லை. நான் அவற்றை எதிர்பார்க்கவும் இல்லை.
எனக்கு எதுவித மதுபான பர்மிட்டும் இல்லை. ஆனால் எனது பெயரில் நாட்டுக்கு கல்வி வழங்கும் பல நிறுவனங்கள் உள்ளன” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
தங்கமகள் சீரியலை தொடர்ந்து யுவன் மயில்சாமி நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புதிய விவரம் Cineulagam
படு மாஸாக விஜய் வீட்டில் நடக்கும் காவேரியின் வளைபாப்பு... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ இதோ Cineulagam