தேர்தல் விதி மீறல்! ரணில் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் விதிமுறைகளை மீறி தனது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹரீன் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவை தனது ஆலோசகர்களாக ஜனாதிபதி நியமித்துள்ளமை தேர்தல் விதிமுறைகளிற்கு முரணான விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குற்றம் சுமத்தும் அனுர..
தேர்தல் காலத்தின் போது புதிய நியமனங்களிற்கு தடை விதித்து தேர்தல் ஆணைக்குழு உத்தரவை வெளியிட்டுள்ளது, இந்த உத்தரவை ஜனாதிபதி மீறியுள்ளார் என அனுரகுமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவர்களின் முன்னைய அமைச்சுகளின் ஆலோசகர்களாக ஜனாதிபதி அவர்களை நியமித்துள்ளார், இதன் மூலம் அவர்கள் அந்த அமைச்சுகளின் நடவடிக்கைகளில் தலையிடலாம், ஊதியம் பெறலாம், வாகனங்களை பெறலாம்.
ஐக்கியதேசிய கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்துகின்றனர். அகிலவிராஜ் உட்பட பலருக்கு ஆலோசகர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரத்திற்காக அரசவளங்களை துஸ்பிரயோகம் செய்கின்றார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.