நேரடி விவாதத்திற்கு தயாராகும் ஜனாதிபதி வேட்பாளர்கள்: அரியநேத்திரனுக்கும் அழைப்பு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் ஆறு பேரின் பங்குபற்றுதலுடன் நேரடி விவாதம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பஃபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 07 ஆம் திகதி இந்த விவாதத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரியநேத்திரன்
பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர மற்றும் அரியநேத்திரன் ஆகியோருக்கு இதில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதத்தை அனைத்து இலத்திரனியல் தொலைகாட்சிகள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகள் ஊடாக நேரடியாக ஒளிபரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam