அரசியல்வாதிகளின் கட்சி தாவல்கள் தொடர்பில் வெளியான தகவல்
இந்த வாரம் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவான அரசியல்வாதிகளின் பல கட்சித் தாவல்கள் விரைவில் இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் பல ஜக்கிய மக்கள் சக்தியின் (SJB) எம்.பிக்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கை அடிப்படையிலான அரசியல்
இது தொடர்பாக ஏற்கனவே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தப்பட்டு வருகின்றதோடு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கிட்டத்தட்ட முப்பது வெவ்வேறு அரசியல்வாதிகள் ஏற்கனவே பக்கம் மாறியுள்ளனர்.
இந்நிலையில், கட்சி தாவும் தவளை அரசியலுக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் முடிவு கட்டப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
மேலும், எமது நாட்டுக்கு கொள்கை அடிப்படையிலான அரசியலே தேவைப்படுவதோடு அந்த வழியிலேயே எமது அணி பயணிக்கின்றது என்றும் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
