மனவேதனையை சிரித்துக் கொண்டே வெளிப்படுத்திய மகிந்த
தன்னைக் கைவிட்டு ஜனாதிபதி ரணிலின் கரங்களை பலப்படுத்த சென்றவர்களை எண்ணி, சிரிப்பதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.
எந்தவொரு தேர்தலும் சவாலானது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, நாமல் ராஜபக்ச வெற்றியீட்டுவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச
தன்னை விட்டுச் சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு மகிந்த ராஜபக்ச சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
“என்னிடம் ஒரு சலூன் கதவு உள்ளது. நீங்கள் செல்லலாம். நீங்கள் வரலாம். எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
