அதானி தொடர்பிலான முடிவை வெளியிட்ட அநுர!
அதானி குழுமம் ஏனைய நாடுகளுடன் முன்னெடுக்கும் பரிவர்த்தனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வர்த்தக ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாங்கள் அடிப்படையில் எங்கள் முதலீடுகள், எங்கள் வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டுள்ளோம். அதானி குழுமம் ஏனைய நாடுகளுடன் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதில் இலங்கை அக்கறை கொள்வதில்லை.
முக்கியமான முதலீடு
அதானி நிறுவனம் நாட்டில் எவ்வாறான பணிகளை முன்னெடுக்கிறது என்பது குறித்தே கவனம் செலுத்தப்படுகிறது.
முயற்சிகளுக்கு ஏற்ற வகையில் பணியாற்றியிருந்தால், அதானி குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
இலங்கையில் முக்கியமான முதலீடுகளைக் கொண்டுள்ள அதானி குழுமத்துக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை அரசாங்கம் அதே கோணத்தில் அந்த நிறுவனத்தை பார்க்காது.
அபிவிருத்தி திட்டம்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கும் அதானி குழுமம் எரிசக்தி துறையில் முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறது.
எனினும், துரதிஷ்டவசமாக, சுற்றுச்சூழல் அக்கறை கொண்டவர்களால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறித்த வழக்கில் நன்மை தீமைகள் மற்றும் மக்களின் ஒருமித்த கருத்து ஆகியவற்றை நாங்கள் கவனத்தில் கொள்வோம். பின்னர் எது சிறந்தது என்பதைப் பரிசீலிப்போம்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
