பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை அநுர அரசு பாதுகாக்க வேண்டும்! ரவி கருணாநாயக்க எம்.பி. கோரிக்கை
மக்களுக்கு அரசால் வழங்கப்படும் எரிபொருள் மானியங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக வழங்காமல், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூலமாகவே நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று(26.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "டொலர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி வெளிநாட்டு எரிபொருள் விநியோக நிறுவனங்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், அரசு வழங்கும் மானியச் சலுகைகள் அந்த நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பொருளாதார நகர்வு
வெளிநாட்டு நிறுவனங்கள் தமது சொந்த டொலர்களை முதலீடு செய்து இலாபம் ஈட்டுவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தேசிய வளமான பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தைப் பலவீனப்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பது தவறான பொருளாதார நகர்வு.
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்க்கைச் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பணப்புழக்கமின்மை மற்றும் வருமானமின்மை காரணமாகப் பொதுமக்கள் தங்களது சொத்துக்களையும் நகைகளையும் அடகு வைப்பது கடந்த ஆண்டை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

மக்களின் இந்தத் திண்டாட்ட நிலைமை தற்போதைய பொருளாதார நிர்வாகத்தின் போதாமையை வெளிப்படுத்துகின்றது.
அதேபோல், எதிர்கால வருமானத்தை நம்பி இன்றைய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மக்கள் கடன் அட்டை கடன்களையும், குத்தகை முறைகளையும் அதிகளவில் நாட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு முதலீடு
பொதுமக்கள் கடனாளிகளாக்கப்படும் இந்த நிலைமை நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்துக்கும் மிகவும் ஆபத்தான போக்காகும்.
நாட்டின் பொருளாதாரம் இன்னும் பலவீனமான நிலையிலேயே உள்ளது என்று சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அரசு கடுமையான நிதியியல் ஒழுக்கத்தைப் பேண வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தும்போது நாட்டின் சுயாதீனத்தையும் மக்களின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் திறம்படச் செயற்பட வேண்டும்.
வெறுமனே வரிகளை உயர்த்துவதை விட்டுவிட்டு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துத் துரித பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே தற்போதைய உடனடித் தேவை எனத் தெரிவித்துள்ளார்.
புடின் அளித்த 10 பில்லியன் பவுண்டுகள்... வட கொரியாவில் மூளைச்சலவை செய்யப்படும் உக்ரைன் சிறார்கள் News Lankasri