களு கங்கையில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு: எச்சரிக்கை மட்டத்தை எட்டிய பல நதிகள்
நாட்டில் நிலவி வரும் பலத்த மழை காரணமாக களு கங்கை வடிநிலப் பகுதியின் சில நீர்மானி நிலையங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு பதிவாகியுள்ளதுடன், மேலும் பல நதிகளின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முக்கிய களு கங்கை வடிநிலத்தின் இரத்தினபுரி களு கங்கையின் நீர்மட்டம் 8.20 மீற்றராக உயர்ந்துள்ளது கலவெல்லாவ (மில்லகந்த): நீர்மட்டம் 6.50 மீற்றரை எட்டி சிறிய வெள்ளப்பெருக்கு மட்டத்தை அடைந்துள்ளது.
மகுரு கங்கையின் நீர்மட்டம் 4.69 மீற்றராக உயர்ந்து, எச்சரிக்கை மட்டமான 4.00 மீற்றரைக் கடந்துள்ளது.
எச்சரிக்கை
களனி கங்கை வடிநிலம்:கிளன்கோர்ஸ் நீர்மட்டம் 15.12 மீற்றராக உயர்ந்து எச்சரிக்கை மட்டத்தைக் (15.00 மீற்றர்) கடந்துள்ளதுடன், தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
ஜின் கங்கை (தவலம): நீர்மட்டம் 4.10 மீற்றராக உயர்ந்து எச்சரிக்கை மட்டத்தைக் (4.00 மீற்றர்) கடந்துள்ளதுடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அத்தனகலு ஓயா (துனமலே): 4.10 மீற்றராக நீர்மட்டம் உயர்ந்து எச்சரிக்கை மட்டத்தைக் கடந்துள்ளது. நில்வளா கங்கை (பனடுகம): நீர்மட்டம் 5.73 மீற்றரை எட்டியுள்ளதுடன், சிறிய வெள்ளப்பெருக்கு மட்டமான 6.00 மீற்றரை நெருங்கி வருகிறது.
இந்தநிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால், பாதிக்கப்பட்ட நதிகளை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் வெள்ள அபாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.