கிளிநொச்சியில் போதைப்பொருளை கட்டுப்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்
கிளிநொச்சியில் கிராமத்தில் அதிகரித்து காணப்படும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றையதினம்(26.10.2026) செல்வாநகர் கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
செல்வா நகர் முத்துமாரி அம்மன் ஆலய முன்றாக ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக செல்வாநகர் சந்திவரை முன்னெடுக்கப்பட்டது.
கவனயீர்ப்பு போராட்டம்
கிராமத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் கிராமத்தின் இளைஞர்கள் தவறான வழியில் செல்வதால் கிராமத்தில் சமூக சீரழிவுகள் அதிகரித்து வருகின்றது.

இந்தநிலையில் உரிய திணைக்களங்கள் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த வலியுறுத்தி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் நிறைவில் ஜனாதிபதி மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பப்படவுள்ள மனு வாசிக்கப்பட்டது.
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri