புதிய அரசியல் சக்தியை உருவாக்கும் முயற்சியில் சரத் பொன்சேகா !
இலங்கையில் புதிய அரசியல் சக்தி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ராணுவ தளபதியும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பழைய அரசியல் கலாச்சாரத்தை புறந்தள்ளி புதிய அரசியல் சக்தி ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ராணுவ தளபதியாக கடமையாற்றிய காலத்தில் தமக்கு மாதாந்தம் 65 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கப்பெற்றது என தெரிவித்துள்ளார்.
தாமும் பிறந்தது முதல் மத்திய வகுப்பு குடும்பப் பின்னணியை கொண்ட வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். மத்திய வகுப்பு குடும்ப பின்னணியை கொண்ட காரணத்தினால் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து தமக்கும் விரிவான தெளிவு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் பல்வேறு தொழில்துறைகள் காணப்பட்டாலும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அந்தந்த தொழில்துறைகளில் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாழும் வாழ்க்கையை வாழ முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அந்த தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்டுதல், ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுத்தல், சட்டத்தை அனைவருக்கும் சமமான முறையில் அமல்படுத்தல், தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது தமது புதிய அரசியல் சக்தி என அவர் தெரிவித்துள்ளார்.
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri