கௌதம புத்தர் யாசகர் அல்ல – தித்தகல்லே ஆனந்தசிறி தேரர்
கௌதம புத்தர் ஓர் யாசகர் கிடையாது எனவும் அசர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளவரசர் எனுவும் தித்தகல்லே ஆனந்தசிறி தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்கு ஓருவர் ஹோட்டலுக்கு செல்வது ஒன்றும் பெரிய விடயமல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஹாராமஹாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்களில் ஓருவரான பலங்கொட கஸ்ஸப தேரர், பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற விவகாரம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

சில தரப்பினர் பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து சேறு பூசி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச மாளிகைகளில் கூட பௌத்த பிக்குகள் தங்க முடியும் எனவும் அலரி மாளிகையில் கூட தங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிறப்பில் மட்டும் பெளத்தர்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும் இந்த விடயம் ஆச்சரியமாக தெரியக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பௌத்த பிக்குகளுக்கு அரச மாளிகைகளைக் கூட காணிக்கையாக்கிய சந்தர்ப்பங்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கொழும்பு வரும் போது ஹோட்டல்களில் தங்கியிருந்து பூஜைகளில் ஈடுபட்டதாகவும் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் இவ்வாறு ஹோட்டல்களில் தங்கியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சேறு பூசல்களினால் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு மன அழுத்தங்களுக்கு ஞானசார தேரர் உள்ளாகியுள்ளார் என தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
புடின் அளித்த 10 பில்லியன் பவுண்டுகள்... வட கொரியாவில் மூளைச்சலவை செய்யப்படும் உக்ரைன் சிறார்கள் News Lankasri