குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி : பிடியை இறுக்கும் அநுர அரசாங்கம்
கடந்த ஆட்சிக் காலங்களில் பாரிய ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் படுகொலைகளை அரங்கேற்றியவர்கள் எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும், அவர்கள் அனைவரும் சிறைகளிலேயே தங்களது காலத்தைக் கழிக்க நேரிடும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்களின் வரிப்பணத்தைச் சூறையாடி நாட்டைப் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையச் செய்தவர்களுக்கும், தமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மனித உயிர்களைப் பறித்தவர்களுக்கும் எதிராக எவ்விதப் பாரபட்சமுமின்றிச் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசின் கீழ் நாட்டின் நீதித்துறையும் சட்ட அமுலாக்கல் நிறுவனங்களும் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றிச் சுயாதீனமாகச் செயற்படுகின்றன.
கடந்த காலங்களைப் போன்று அதிகார செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்குகளை மூடிமறைக்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

குற்றமிழைத்தவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவிகளிலோ அல்லது செல்வாக்கு மிக்க நிலைகளிலோ இருந்தாலும், அவர்களுக்குரிய தண்டனையைச் சட்டம் நிச்சயம் பெற்றுக்கொடுக்கும்.
விசாரணைகள் துரிதப்படுத்தப்படும்
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக நீதியை நிலைநாட்டுவதற்கு அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
எனவே, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எவரும் சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் எனப் பகற்கனவு காண வேண்டாம்.
குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
அதிகாரத்தை இழக்கும் அபாயம்... எதிர்க்கட்சிகளுடன் ஐக்கிய அரசாங்கத்திற்கு முயலும் நெதன்யாகு News Lankasri
தரையிறங்கவிருந்த விமானத்தை நிலநடுக்கத்தில் இருந்து சாமர்த்தியமாக காப்பாற்றிய திக் திக் தருணம் News Lankasri