குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பணிகள் நாளை (30.11.2026) வழமை போன்று இடம்பெறும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாளை குறித்த திணைக்களத்தின் பணிகள் வழமை போன்று இயங்காது என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
வெளியிடப்பட்ட அறிவிப்பிற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சு நாளை வழமை போன்று பணிகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளது.
விசா தொடர்பான பணிகள்
அத்தோடு, அந்தப் பிரசாரங்கள் பொய்யானவை எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடவுச்சீட்டுகளை வழங்குதல், விசா தொடர்பான பணிகள் உள்ளடங்கலாக சாதாரண நாட்களில் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் எவ்வித தடையுமின்றியும், தாமதமின்றியும் வழமை போன்று மேற்கொள்ளப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.