ஜப்பானை அச்சுறுத்தும் மற்றுமொரு சூறாவளி - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஜப்பானின் கிழக்குப் பகுதி மற்றும் டோக்கியோ பெருநகரப் பிராந்தியங்களை நோக்கி துஜுவான் (Typhoon Dujuan) எனும் பலத்த சூறாவளி நகர்ந்து வருவதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக கனமழையுடன் கூடிய பலத்த காற்றும் வீசி வருவதுடன், மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.
காலநிலை சீற்றம்
இசு தீவுக்கூட்டம் மற்றும் கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை முதல் 300 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் ஓஷிமா நகருக்கு உயர்மட்ட அவசர மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மோசமான வானிலை காரணமாக ஜப்பானின் அய்சி மாகாணத்தில் நடைபெறவிருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் குதிரையேற்றப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் செல்லவிருந்த ஜப்பானியப் பிரதமர் சனாயே தகாய்ச்சி தனது பயணத்தை நான்கு மணித்தியாலங்கள் தாமதித்துள்ளார்.
நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.