ஒடிசாவில் மற்றுமொரு தொடருந்து விபத்து!
ஒடிசாவின் மற்றொரு பகுதியில், மீண்டும் ஒரு சரக்கு தொடருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிர் சேதம் இல்லை
இந்த சம்பவம் கோரமண்டல் கடுகதி தொடருந்து விபத்துக்குள்ளான ஒடிசா மாநிலம் பர்காஹ் மாவட்டத்தில் இன்று(05.06.2023) இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதன்போது சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்தொன்றின், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை வந்து பயணித்த கோரமண்டல் கடுகதி தொடருந்து, ஒடிசா மாநிலத்தின் பாலசோா், பஹாநகா் தொடருந்து நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.
ஒடிசா தொடருந்து விபத்து

தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு தொடருந்து மீது, கோரமண்டல் கடுகதி தொடருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹெளரா கடுகதி தொடருந்து கோரமண்டல் தொடருந்து பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர சம்பவத்தில் சுமார் 280 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri