உலக நாடுகளை உலுக்கிய ஒடிசா தொடருந்து விபத்து! இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற கோர தொடருந்து விபத்தில் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என ஆராய்ந்து வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரஸ்தொடருந்து, ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

அதிகரிக்கும் உயிரிழப்பு
இந்த விபத்தில் தற்போது வரை 288 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விபத்தில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, தொடர்ச்சியாகத் தகவல்களைப் பெறுவதற்காக கன்சியூலர் அதிகாரி கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam