பாதாள உலகக்குழுத்தலைவர் விடுத்துள்ள மற்றுமொரு அச்சுறுத்தல்
கைதிகளின் கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பூஸா சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக குறித்த அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரிய குற்றவாளிகளிடம் உள்ள கைத்தொலைபேசிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக முன்னெடுத்திருந்தனர்.
அச்சுறுத்தல்
இதன்போது நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சார்ஜர்கள், டேட்டா கேபிள் மற்றும் சிம் அட்டைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அலுவலகம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்தே பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரியை அச்சுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதிகளை பார்வையிடும் விசேட சந்தர்ப்பம்
இதேவேளை, வருடாந்த சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள கைதிகளை பார்வையிடும் விசேட சந்தர்ப்பம் எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |