கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை - தீவிர விசாரணையில் பொலிஸார்
கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
Pickering பகுதியை சேர்ந்த 28 வயதான சுலக்சன் செல்வசிங்கம் என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு
இந்த சம்பவம் ஸ்காப்ரோவின் வோர்டன் அவன்யூவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூடு நடந்த போது சுலக்சன் அமர்ந்திருந்த வாகனத்திலும், எரிபொருள் நிலைய சுவரிலும் துப்பாக்கி சன்னங்களின் காயங்கள் காணப்பட்டன.
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் அல்லது சந்தேக நபர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ரொரன்ரோ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri