அரசாங்கத்தின் யோசனையை எதிர்த்து உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு மனு
அரசாங்கத்தின் பொது நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை எதிர்த்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா (TISL) உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த யோசனையின் சில சரத்துக்கள், பொது கொள்முதல் மீதான கட்டுப்பாடுகளை தீவிரமாக பலவீனப்படுத்துவதோடு அதன் மூலம் ஊழல் அபாயத்தை அதிகரிக்கிறது மற்றும் சமநிலையை பலவீனப்படுத்துகிறது என்று குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதிவாதியாக சட்டமா அதிபர்
இந்த யோசனை இந்த ஆண்டு மே 10ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன் மே 22ஆம் திகதி முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
முன்னதாக குறித்த யோசனைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அரசாங்கம் இந்த யோசனையை சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
