வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு
கடந்த நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான முரண்பாடான தகவல்களையடுத்து வீதியில் பயணிக்கும் போது கட்டாயம் எடுத்த செல்ல வேண்டிய ஆவணங்கள் தொடர்பில் பொலிஸார் மீள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
அனைத்து சாரதிகளும் சாதாரண வாகனங்களுக்கு 4 ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் அல்லது ஹைட்பிரிட் வாகனங்களுக்கு மட்டும் 3 ஆவணங்கள் தேவைப்படுவதாகவும் கனரக வாகனங்களுக்க 5 ஆவணங்கள் தேவைப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்னர்.
ஓட்டுநர் உரிமம்
ஓட்டுநர் உரிமம், வருமானச் சான்றிதழ் மற்றும் அதன் நகல் (புகைப்பட நகல் கண்ணாடியில் ஒட்டப்பட வேண்டும்), வாகன காப்பீட்டு சான்றிதழ், வாகன உமிழ்வு சான்றிதழ் ஆகியவை கட்டாய ஆவணங்களாகும்.
மேலும் கனரக வாகனங்களுக்கு மட்டும் வாகனத் தகுதிச் சான்றிதழ் தேவையாகும். வாகனத்தில் பயணிக்கும் போது சிலர் வாகனப் பதிவுச் சான்றிதழை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என பொலிஸ் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையில் வாகனத்தை எடுத்துச் செல்வது தொடர்பான சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் அது அவசியம் என தவறாகத் தெரிவித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பொலிஸார் இதனை தெளிவுப்படுத்தியுள்ளனர்.