எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்!
புத்தளம் நகரப் பகுதியில் எரிபொருள் வரிசையில் இன்னுமொரு மரணம் சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(3) அதிகாலை புத்தளம் நகரப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
எரிபொருள் பெறுவதற்காக புத்தளம் நகரப் பகுதியில் காத்திருந்த 63 வயதான நபரொருவர் அதிகாலை வரிசையில் காத்திருக்கும் நிலையில் உயிரிழந்துள்ளார்.
மரண சம்பவங்கள் அதிகரிப்பு
இதற்கமைய மாரடைப்பு காரணமாக அவரது மரணம் சம்பவித்துள்ளதாக சாட்சியங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் கடந்த சில மாதங்களாக எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் நபர்கள் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தற்போதைக்கு சுமார் இருபது வரையான நபர்கள் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.