எரிபொருளுக்காக காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்! வடமராட்சியில் சம்பவம்
எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென காத்திருந்த மக்களுக்கு மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பெட்ரோல் விநியோகம் இடம்பெறாது என பெயர் பலகையில் அறிவிக்கப்பட்ட நிலையில்,வரிசையில் காத்திருந்த மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
எனினும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய உப பரிசோதகர் சேந்தன் நிலமையை தெளிவுப்படுத்தியதனை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
பெட்ரோல் விநியோகம் தடை
இதேவேளை, புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலுக்கு நேற்றிலிருந்து காத்திருந்து நிலையில், யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று வரவேண்டிய பெட்ரோல் பவுசர் அனுராதபுரம் பகுதியில் பழுதடைந்தமையால் பெட்ரோல் விநியோகம் தடைப்பட்டதாகவும், நாளை பெட்ரோல் விநியோகம் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,குறித்த
எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் காத்திருந்த நூற்றுக்கணக்கான பெட்ரோல்
வாகனங்களுடன் மக்கள் ஏமாற்றமடைந்து சென்றுள்ளனர்.