அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில்: ஆனந்தசங்கரி வேண்டுகோள்
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் நேற்று(19.03.2025) நடத்திய ஊடக சந்திப்பதையே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. அதற்கான பணமும் எங்களிடம் இல்லை இந்த தேர்தலில் எமது கட்சி போட்டியிடவில்லை.
பணம் இல்லை
நடைபெற உள்ள தேர்தல் தான் முக்கியமான ஒரு தேர்தலாக அமையும் இப்போது வெளியிடங்களில் இருந்து வந்து கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி தீர்த்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.
என்னுடன் பேரம் பேசியதாக கூட சொல்லுகின்றார்கள் என்னிடம் இவ்வாறு தேர்தலில் வீசி எறிய பணம் இல்லை.
ஆனால், அரசியலுக்காக இல்லாமல் அனைவருமே ஒன்று திரண்டு ஒரணியிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்க முன் வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
