அர்ஜுன் அலோசியஸு க்கு எதிராக குற்றப்பத்திரிகையை கையளிக்க உத்தரவு
செய்தித்தாள், அச்சிடுவதற்காக அச்சுத் தாள் வாங்குவதில் 12 மில்லியன் ருபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, அர்ஜுன் அலோசியஸ்(Arjun Aloysius )மீதான குற்றப்பத்திரிகையை கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, 2025 ஏப்ரல் 30 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக, அந்த குற்றப்பத்திரிகையை கையளிக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல இன்று உத்தரவிட்டுள்ளார்.
குற்றவியல் முறைகேடு
அச்சுத் தாள் இறக்குமதி செய்து விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள நெப்டியூன் பேப்பர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கடதொட கெதர சமிந்த சஹான் ஆகியோருக்கு எதிராக, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, அலோசியஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார், ஆனால் இரண்டாவது குற்றவாளியான சமிந்த சஹான் முன்னிலையாகவில்லை தனது வங்கிக் கணக்கில் போதுமான நிதி இல்லை என்பதை அறிந்திருந்தும், 2019 ஆம் ஆண்டில் அலோசியஸ் நான்கு காசோலைகளை வழங்கியதாக, வழக்காளியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகளில் மோசடி மற்றும் குற்றவியல் முறைகேடு ஆகியவை அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அலோசியஸுக்கு குற்றப்பத்திரிகை
இருப்பினும், நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பிரதிவாதி சிறையில் இருந்தமையால் குற்றப்பத்திரிகையை பெற முடியவில்லை என்றும் பிரதிவாதிகள் குறிப்பிட்டனர்.
இருப்பினும், குற்றப்பத்திரிகை ஏற்கனவே சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு முறையாக வழங்கப்பட்டதாக வழக்கு தொடுநர் கூறினார்.
அத்துடன், சந்தேக நபர் நடவடிக்கைகளை தாமதப்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த பின்னர், ஏப்ரல் 30 ஆம் திகதி அலோசியஸுக்கு குற்றப்பத்திரிகையை முறையாக வழங்க உத்தரவிட்ட மேலதிக நீதிவான், வழக்கை ஒத்திவைத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan
