அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைபாடு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின்(Ramanathan Archchuna) வெறுப்பு பேச்சுக்களை ஹன்சார்ட் பதிவிலிருந்து நீக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் விமர்சனங்களால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையில் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாடுகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைபாடு செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தமிழ் மொழி ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன்தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri
