விபத்துக்குள்ளான அமெரிக்காவின் பனிச்சறுக்கு நட்சத்திரம்! பெரும் சோகத்தில் இரசிகர்கள்
இத்தாலியின் கோர்டினாவில் நடைபெற்று வரும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்காவின் பனிச்சறுக்கு நட்சத்திரம் லின்ட்சே வான் (Lindsey Vonn) விபத்துக்குள்ளான சம்பவம் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
41 வயதான வான், ஒன்பது நாட்களுக்கு முன்புதான் தனது இடது முழங்காலில் தசைநார் கிழிந்து கடுமையான காயத்திற்குள்ளாகியிருந்தார்.
எனினும், ஒலிம்பிக் கனவுக்காகவும், தனது விருப்பத்திற்குரிய 'டவுன்ஹில்' (Downhill) போட்டியில் பங்கேற்பதற்காகவும் அவர் மிகப்பெரிய சவாலை ஏற்று களம் கண்டார்.
நிலைதடுமாறி விபத்து
பயிற்சியின் போது சிறப்பாகச் செயல்பட்ட அவர், இறுதிப் போட்டியின் போது ஒரு பனிச்சரிவுத் தடுப்பில் மோதி நிலைதடுமாறி விழுந்தார்.

சுமார் 15 நிமிடங்கள் மைதானத்திலேயே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக அவர் ஹெலிகொப்டர் மூலம் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
தற்போது அவர் சீரான நிலையில் இருப்பதாக அமெரிக்க பனிச்சறுக்கு குழு உறுதிப்படுத்தியுள்ளது.
நேர்ந்த கொடூரம்
லின்ட்சே வான் இந்த விபத்தைச் சந்தித்த அதே போட்டியில், சக அமெரிக்க வீராங்கனையான ப்ரீசி ஜோன்சன் (Breezy Johnson) 1 நிமிடம் 36.10 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

ஜோன்சன் தனது சக வீராங்கனையின் நிலை கண்டு கண்ணீர் மல்க தனது வெற்றியைக் கொண்டாடினார். இந்த விபத்தானது லின்ட்சே வானின் ஐந்தாவது மற்றும் கடைசி ஒலிம்பிக் பயணமாக இருக்கும் என கருதப்படுகிறது.
விளையாட்டு உலகில் பல மீள்வருகைகளை நிகழ்த்திய ஒரு வீர வீராங்கனைக்கு இத்தகையதொரு முடிவு நேர்ந்தது 'மிகவும் கொடூரமானது' என முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam