பொலிஸாரின் உத்தரவை மீறிச்சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு - சாரதி தப்பியோட்டம்
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் அந்ததோல பகுதியில் இன்று (09) பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடை நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற லொறியை சோதனைக்காக நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர்.
பொலிஸார் துப்பாக்கிச்சூடு
இதன்போது குறித்த லொறியை நிறுத்தாமல் சாரதி தொடர்ந்து சென்றபோது பொலிஸார் லொறியைத் துரத்திச்சென்று நிறுத்த முயன்றபோதும் தொடர்ந்தும் சென்றமையினால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து லொறியை சோதனை செய்தபோது, அதில் 10 பசுக்கள் மற்றும் 04 எருமைகள் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒன்றின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
தப்பியோடிய சந்தேகநபர்கள்
இதன்போது லொறியில் இருந்த இரண்டு சந்தேகநபர்கள் 5,200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்குரெஸ்ஸ மற்றும் பேருவளை பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, லொறியின் சாரதி மற்றும் மற்றொரு சந்தேகநபர் தப்பியோடிய நிலையில், அவர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri