தீவிரமடையும் இருதரப்பு போர்க்களம்! உக்ரைனில் அமெரிக்க ஊடகவியலாளர் சுட்டுக்கொலை
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 18 ஆவது நாளாக இன்று நீடித்து வருகின்றது.
இந்நிலையில், இருதரப்பு மோதலின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்காவின் ஊடகவியலாளரும், திரைப்பட படைப்பாளருமான பிரண்ட் ரெனாவ்ட் (51) உயிரிழந்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவின் வடமேற்கு புறநகர் பகுதியான இர்பினில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போரை நிறுத்த அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. ஐ.நா. அமைப்பும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. போரால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர்.
எனினும், ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam

Tamizha Tamizha: என் மனைவி அமைதியா இருக்கானு மட்டும் நினைக்காதீங்க... தொகுப்பாளரிடம் குமுறிய கணவர் Manithan
