லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி
மத்திய லண்டனில் சீனாவின் பிரம்மாண்ட தூதரகத்தை அமைக்க அனுமதி அளித்த அரசாங்கத்தின் முடிவு சட்டப்பூர்வமானது தான் என பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் தூதரக கட்டுமானத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சீனத் தூதரகம்
லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரோயல் மிண்ட் கோர்ட்' குடியிருப்பு பகுதியில் அமையவுள்ள இந்த பிரம்மாண்ட தூதரகம் தொடர்பாக, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்த தூதரகம் அமைந்தால் சீன எதிர்ப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் மனித உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், உளவு பார்க்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

எனினும், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வீடமைப்பு அமைச்சகமும் உள்ளூர் நிர்வாகமும் அனைத்துக் கவலைகளையும் கவனமாகப் பரிசீலித்த பிறகே சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறி குடியிருப்புவாசிகளின் மனுவை நிராகரித்தது.
சுமார் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகம், பிரித்தானியாவிலேயே மிகப்பரிய தூதரக வளாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக குடியிருப்புவாசிகள் அமைப்பின் தலைவர் லூக் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதிமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri