தேர்தல் குறித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை
தேர்தல் தொடர்பான உத்தரவுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ எல். ரத்னநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை குறித்த நிறுவனங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள்
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து வேட்பாளர்களும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருடன் தற்பொழுது இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படும் பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ்மா அதிபருடன் இணைந்து செயல்பட உத்தேசித்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அன்று முதல் அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தல் சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri