நல்ல வைத்தியரை மாற்ற கூடாது: அலி சப்ரி வேண்டுகோள்
நல்ல வைத்தியரிடம் நீங்கள் சிகிச்சைக்குச் சென்று அதனால் நல்ல பலன் கிட்டும்போது, அந்த வைத்தியரை மாற்றினால் என்ன நடக்கும் என்பதை மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று (11.09.2024) புதன்கிழமை நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு பெரும் இக்கட்டான நிலைமையில் இருந்தது. அப்போது ஐ.எம்.எப். நாட்டில் அனைவரையும் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வருமாறு வலியுறுத்தியது.

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு ரணிலால் மட்டுமே தீர்வு வழங்க முடியும்: பரப்புரை கூட்டத்தில் திலீபன் எம்.பி
மக்கள் பட்ட கஷ்டங்கள்
ஆனால், எதிர்க்கட்சியினர் அதற்கு முன்வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு பிரதமர் பதவியை வழங்கவும் தயாராக இருந்தோம். அப்போதும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அன்று மக்கள் பட்ட கஷ்டங்கள் இன்று உள்ளனவா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நல்ல வைத்தியரிடம் நீங்கள் சிகிச்சைக்குச் சென்று அதனால் நல்ல பலன் கிட்டும்போது, அந்த வைத்தியரை மாற்றினால் என்ன நடக்கும் என்பதையும் மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும்.
சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். சில கட்சிகள் தெற்கின் கட்சிகள் செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் பயணிக்க வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர்.
செழிப்பான நாடு
சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்த பின்பும் அவருக்கு ஆதரவளிப்பதற்கு என்ன தடையிருக்கின்றது? எனவே, மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதால் நாட்டிலிருக்கும் வலுவான தலைவரே நாட்டை மீட்க வேண்டும்.
சஜித் கூறுவதைப் போல் வெளிநாட்டு செல்வந்தர்களின் உதவிகளை மட்டும் நாம் நம்பியிருக்க முடியாது. ஜே.வி.பி. ஒரு கொள்கையில்லாத கட்சியாகச் செயற்படுகின்றது.
எனவே, நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்ட அனுபவம் மிக்க தலைவருக்கு நாம் இடமளித்தால் அடுத்த ஐந்து வருடங்களும் செழிப்பான நாடு எமக்குக் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
