சீனாவையும் மேற்குலகையும் அனுசரிக்கத்தயார்: ஜே.வி.பி
மக்கள் விடுதலை முன்னனி (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு அமைக்கும் போது, தற்போது ஏற்பட்டுள்ள கடன் சுமைகளை தீர்க்க நாட்டின் வளங்களை திரட்டி பொருளாதாரத்தை பெருகுவதற்கு நடைமுறைகளை மேற்கொள்ளும் என கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சந்திரகுமார் ராமலிங்கம் தெரிவித்தார்.
அக்கினிப் பார்வை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
கடனை திருப்பி செலுத்த சீனா, மேற்கு மற்றும் இந்திய உட்பட்ட அனைத்து தரப்புகளுடன் இணக்கமாக செயல்பட மக்கள் விடுதலை முன்னணி தயாராகவே இருக்கிறது.
மேலும் மஹிந்த ராஜபக்ச UPFA கூட்டணியின் பிரதமர் ஆகவும், பின்னர் ஜனாதிபதி வேட்பாளராகவும் முன்னிறுத்தியது உட்பட பல முடிகள் தவறானவை என்பதையும் மக்கள் விடுதலை முன்னணி ஏற்று கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிகழ்ச்சியினை முழுமையாக பார்வையிட: