நல்லாட்சி காலத்தில் நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிக்கப்படவில்லை - அஜித் பி. பெரேரா ஆவேசம்

Colombo Ajith Perera
By Rakesh Jul 30, 2026 11:25 AM GMT
Report

நல்லாட்சி அரச காலத்தில் நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

அந்தக் காலப்பகுதியில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையே எடுக்கப்பட்டதே தவிர, அவர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வைத்தியசாலையில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடகர்.. பொலிஸ் அதிகாரி மீது கடும் தாக்குதல்

வைத்தியசாலையில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடகர்.. பொலிஸ் அதிகாரி மீது கடும் தாக்குதல்

கொழும்பில் நேற்று (29.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தீர்மானம் எடுக்கப்படவில்லை

அவர் மேலும் தெரிவிக்கையில், 2015, 2016, 2017 காலப்பகுதியில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாக எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள், நீதிபதிகளின் எண்ணிக்கையே அப்போது அதிகரிக்கப்பட்டது. நீதிமன்ற முறைமைச் சட்டத்தைத் திருத்தி மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தோம்.

இதற்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. தற்போதைய திருத்தத்தின் குறிப்பிட்ட திகதியைக் கவனிக்கும் போது, இது ஒரு தனிநபரை இலக்கு வைத்தது என்பது தெளிவாகின்றது.

தனிநபரை இலக்கு வைத்த அரசமைப்புத் திருத்தம் எனக் கடுமையான விமர்சனங்கள் எழும்போதே, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மாத்திரமின்றி அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுகின்றது என அரசாங்கம் நியாயம் கூற முற்படுகின்றது.

நல்லாட்சி காலத்தில் நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிக்கப்படவில்லை - அஜித் பி. பெரேரா ஆவேசம் | Ajith P Perera Statement

தயாரிக்கப்பட்டுள்ள வரைவு

இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் நீதி அமைச்சில் இதற்காக எப்போது ஒரு குழு கூடியது? நாடாளுமன்றத்தின் நீதி விவகார ஆலோசனைக் குழு கூடிப் பரிந்துரைகளைப் பெற்றதா? இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குவதற்கு முன்னதாகவே, இந்த வரைவு தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சட்டத்தரணிகள் சங்கம் புறக்கணிக்கப்பட்டமை ஏன்? அரசமைப்பின் 107 ஆவது பிரிவில் உள்ள அனைத்து விதிகளும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

ஜே.ஆர். ஜெயவர்த்தன கூட நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான இந்த விதிகளில் கைவைக்கவில்லை. அவருக்குப் பின்வந்த எந்தவொரு ஜனாதிபதியும் இதில் தலையிடவில்லை.

நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீரழிக்கும், ஒரு தனிநபரை இலக்கு வைக்கும், நீதித்துறை சுயாதீனத்தை இல்லாதொழிக்கும் இந்த அர்த்தமற்ற திருத்தத்தைக் கொண்டுவரும் பாவச் செயலில் பங்கேற்க வேண்டாம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்

கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்

மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US