கனடாவில் தமிழர் ஒருவரின் அநாகரீக செயல் - பொலிஸார் கைது
கனடாவில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் Durham பிராந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Durham பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
59 வயதான அஜாக்ஸ் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அநாகரீகமான சட்டம் மற்றும் குற்றவியல் துன்புறுத்தல் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

புதிய தகவல்களை கோரும் பொலிஸார்
கடந்த மாதம் 24ம் திகதி பேருந்துக்காக காத்திருந்த இரு பெண்களிடம் குறித்த நபர் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் 25ம் மற்றும் 26ம் திகதிகளிலும் இதேபோன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். Ajax நகரை சேர்ந்த 59 வயதான கண்ணா பொன்னையா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரும் இல்லை என்பதை புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்த விரும்புகிறார்கள்.
இந்நிலையில், இந்த விசாரணையைப் பற்றிய புதிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan