சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் கைது(Photo)
அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் குடாகிவுல பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் புத்தளம் பொலிஸ், போதை ஒழிப்பு பிரிவினரினால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் நடவடிக்கை
பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 40 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸ், போதை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகளையும் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
