கனடாவில் நடைமுறைக்கு வரும் புதிய தடை
கனடாவில் கைத்துப்பாக்கி உரிமைகள் தடுக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அறிவித்துள்ளார்.
இதற்கமைய, கைத்துப்பாக்கிகளை கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான தடையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் புதிய சட்டத்தை முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவில் கைத்துப்பாக்கி உரிமை முடக்கம்
அதற்கமைய, எந்த வகையிலான கைத்துப்பாக்கிகளையும் கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் என்பனவற்றிற்கு முழுமையான தடை விதிக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள பாடசாலையொன்றில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து, கனடாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழப்பதுடன், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் ஒழிய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளதாகவும் அவர் தெரவித்துள்ளார்.
இந்த நிலையில், பெருகி வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தடுக்கும் முகமாக கனடா பிரதமர் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவி்ப்பினை தொடர்ந்து நாடு முழுவதும் கைத்துப்பாக்கி விற்பனையை முடக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்மொழிந்ததை அடுத்து, கனேடிய மக்கள் துப்பாக்கி கடைகளுக்கு படையெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
