விமான விபத்தின் இரண்டு கறுப்புப் பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிப்பு
அகமதாபாத்தில் நேற்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கறுப்புப் பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு கறுப்புப் பெட்டிகளில், விமானத்தின் பின்புறத்தில் உள்ள ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமானம் பற்றிய தகவல்கள்
விமானத்தின் முன் பகுதியில் உள்ள இரண்டாவது கறுப்புப் பெட்டி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கறுப்புப் பெட்டி என்பது ஒரு விமானம் பறக்கும்போது அதைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்யும் ஒரு சிறிய இயந்திரமாகும்.
அதிவேக விபத்துகளைத் தாங்கும் வகையில் இவை வடிவமைக்கப்படும்.
விபத்திற்கான காரணங்களைக் கண்டறிய இந்த கறுப்புப் பெட்டி உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
