முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கவுள்ள சர்வதேச பிரதிநிதி
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமர்ட் (Agnès Callamard) நாட்டை வந்தடைந்துள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தினுடைய இன்றைய(16) விஜயமானது தெற்காசியாவிற்கான முதல் விஜயமாகும்.
இந்நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் அவர் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்புச் சபையின் அறிக்கை
எதிர்வரும் 18 ஆம் திகதி, இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடத்திலான ஏற்பாடுகள் யாவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை சர்வதேச ஊடகவியலாளர்களும் அங்கு வருகை தந்து கண்காணிப்புகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் இலங்கை புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam