யாழ். பல்கலையின் மருத்துவப் பீட கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்(University of Jaffna) மருத்துவ பீடத்திற்காக யாழ். நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்திற்கு இருநாள் விஜயமாக வருகைதரும் ஜனாதிபதி இம்மாதம் 24ஆம் திகதி குறித்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கற்பித்தல் வசதிகள்
இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.
இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபாய் செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பால் செலவு அதிகரித்து கட்டிடத் தொகுதி இன்னும் நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri
