25000 நீர் பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து கால்வாய் அணைகள் மூடப்பட்டுள்ளமையினால் பொலன்னறுவையில் உள்ள 25000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்கள் கடுமையான நீர் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமையால் பொலன்னறுவையில் வாக்கு எண்ணிக்கையில் இடையூறு ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர்.
இதேவேளை, பொலன்னறுவை பொது வைத்தியசாலை, மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், பாடசாலைகள் போன்ற அரச நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் தட்டுப்பாடு
எவ்வாறாயினும், தற்போதைய நிலைமை குறித்து பொலன்னறுவை நீர்வள மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் ரஞ்சனா அமரசிங்க கூறுகையில்,
“இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். 3 லொறிகள் மற்றும் தற்காலிக தண்ணீர் தாங்கிகளை வைத்து சிரமமின்றி போதுமான தண்ணீரை வழங்குகிறோம்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிய நிலையில், இம்முறை தொடர்ந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |