கிளிநொச்சியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பொலிஸாரின் செயல்
கிளிநொச்சி ஏ-09 வீதி பளைப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இன்று (14) காலை பேருந்துகள் ஏற்றிச் செல்லாத நிலையில் பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி ஏ.09 வீதியின் இத்தாவில் முகமாலை மற்றும் உமையாள்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களை அரச பேருந்துகள் ஏற்றிச் செல்லாத நிலைமை காணப்படுகிறது.
இதனால் தினமும் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
பொறுப்பான அதிகாரி
இந்நிலையில், இன்றைய தினம் காலை முகமாலை பகுதியில் இருந்து பளை மத்திய கல்லூரிக்கு செல்லும் மாணவர்களை நீண்ட நேரமாகியும் அரச பேருந்துகள் எதுவும் ஏற்றி செல்லாத நிலையில், வீதியில் காத்திருந்த மாணவர்களை பளை பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான அதிகாரி தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று பாடசாலையில் விட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
