அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை! மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த நீதிமன்றம்
புதிய இணைப்பு
தமக்கு வழங்கப்பட்ட ஆறு மாத கால சிறைத் தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி டபிள்யு.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்டவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் வரியை செலுத்த தவறியமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், செலுத்த வேண்டிய வரியை தவணை முறையில் செலுத்த அனுமதிக்குமாறும் இந்த மேன்முறையீட்டில் பிரதிவாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், அவர்களின் மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முதலாம் இணைப்பு
டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
வற் வரி ஏய்ப்பு
பெறுமதி சேர் வரி(வற்) ஏய்ப்புச் சம்பவம் தொடர்பில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் வரியை மோசடி செய்தமை தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் இது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.