மாகாண மட்ட தற்காப்பு கலை போட்டிகளில் துணுக்காய் விநாயகபுரம் அ.த.க பாடசாலை வரலாற்றுச் சாதனை!
வட மாகாண பாடசாலகளுக்கிடையில் நடாத்தப்பட்ட மல்யுத்தம், யூடோ, தைகொண்டே போட்டிகளில் துணுக்காய் விநாயகபுரம் அ.த.க பாடசாலை 30 பதக்கங்களை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
குறித்த போட்டிகள் இந்த மாதம் 22,23,24 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் இப்போட்டிகள் நடைபெற்றன.
வடமாகாணமட்ட மல்யுத்தம்,யூடோ , தைகொண்டே போட்டிகளில் இப்பாடசாலையைச் சேர்ந்த 22 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
வரலாற்று சாதனை
இதில் இப் பாடசாலை அணி மொத்தமாக 30 பதக்கங்களை பெற்று வரலாற்று சாதனையை பதிவு செய்தது.
இதில் பங்குபற்றியோர் 11 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் உட்பட 30 பதக்கங்களை பெற்று பாடசாலைக்கும் துணுக்காய் வலயத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளார்கள்.
அத்தோடு பெண்கள் அணியினர் மல்யுத்தப் போட்டியில் மாகாண சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
கடந்த வருடமும் இப்பாடசாலை 18 பதங்கங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




