மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: 80 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்
பொலன்னறுவை, சேவாகம பகுதியில் மோட்டார்சைக்கிளும், சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில், படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் நான்கு வயது சிறுமியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமாவதிய வீதியின் சேவாகம பகுதியில், நேற்று (26.02.2026) இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முதியவர் உயிரிழப்பு
இச்சம்பவத்தில் பொலன்னறுவை, பளுகஸ்தமன பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 80 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த முதியவரும், சிறுமியும் உடனடியாகப் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே முதியவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலன்னறுவை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri