குருநாகல் பகுதியில் ஆசையுடன் டிராக்டரில் ஏறிய சிறுவனுக்கு நேர்ந்த கதி
குருநாகல் - கல்கமுவ பகுதியில் டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(26.02.2026) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறுவன் பயணித்துக்கொண்டிருந்த டிராக்டரில் சாரதி இருக்கைக்கு அருகில் ஏற முயற்சித்துள்ளார். இதன்போது, எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்த சிறுவன், டிரக்டரின் சக்கரத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், மஹநான்னேரிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan