அமெரிக்க செனட் தேர்தலில் வரலாற்று வெற்றி : முதல் முஸ்லிம் செனட்டராக அப்துல் எல் - சயீத்
அமெரிக்காவின் மிச்சிகன் மாநில செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் எல் - சயீத் வெற்றிபெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் மூலம் அமெரிக்க செனட்டுக்குத் தெரிவான முதல் முஸ்லிம் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
ட்ரம்ப் மீதான குறைந்த மக்கள் ஆதரவு
42 வயதான முன்னாள் பொது சுகாதார அதிகாரியான எல் - சயீத், தொழிலாளர் குடும்பங்களுக்கான வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், அனைவருக்கும் மருத்துவக் காப்புறுதி வழங்குதல் மற்றும் அரசியலில் பெருநிறுவனங்களின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துதல் போன்ற வாக்குறுதிகளை முன்வைத்தார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரோஜர்ஸ், ட்ரம்பின் ஆதரவைப் பெற்றிருந்தார்.
எனினும், பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் ட்ரம்ப் மீதான குறைந்த மக்கள் ஆதரவு காரணமாக அவரால் வெற்றிபெற முடியவில்லை.
இந்த வெற்றி ஜனநாயகக் கட்சியின் முற்போக்குப் பிரிவுக்கு முக்கிய அரசியல் வெற்றியாக அமைந்துள்ளதுடன், செனட்டில் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையை மாற்றுவதற்கான ஜனநாயகக் கட்சியின் முயற்சிக்கும் வலுச்சேர்த்துள்ளது.