வீதி ஓரத்தில் கிடந்த தாயின் சடலம்! பொலிஸாரிடம் மகள் வழங்கியுள்ள வாக்குமூலம்
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்ட விலத்தவ பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் விலத்தவ வீதியின் ஓரத்தில் சடலமாக கிடந்ததாக அவரது மகள் வாக்குமூலம் அளித்துள்ளார்.
படுகொலை
65 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டதாக சிலாபம் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,உயிரிழந்த பெண்ணின் மகளின் கணவர் உயிரிழந்த பெண்ணை தேடிச் சென்ற போது நபர் ஒருவர் பெண் ஒருவரை தூக்கிச் செல்வதை பார்த்துள்ளார்.
கைது நடவடிக்கை
மோட்டார் சைக்களில் வௌிச்சத்தில் குறித்த நபரை அடையாளம் கண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனடிப்படையில் குறித்த பெண்ணை கொலை செய்த வீரபொகுன பிங்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து சிலாபம் பொலிஸில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
