ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சட்டவிரோத பதாதைகளை அகற்றும் பொலிஸார்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களால் ஒட்டப்படும் சட்டவிரோத போஸ்டர்கள், பதாதைகள் உள்ளிட்ட சகல சுவரொட்டிகளையும் அகற்றும் நடவடிக்கையை பொலிஸார் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.
சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள கட்அவுட்கள், சுவரொட்டிகள் உள்ளிட்ட அனைத்து அலங்காரங்களையும் அகற்றும் பணியில் 1,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பொலிஸ் நிலையங்களால் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, ஒரு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு நான்கு பணியாளர்களும், முதல் பொலிஸ் நிலையத்திற்கு மூன்று பணியாளர்களும், மற்ற அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு தலா இரண்டு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் சுவரொட்டிகள்
இவ்வாறு பணியமர்த்தப்படும் ஒரு தொழிலாளிக்கு தினசரி சம்பளமாக 1500 ரூபாய் வழங்கப்படும். மேலும் அவர்கள் அந்தந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் சென்று சட்டவிரோத கட்அவுட்கள், பேனர்கள், போஸ்டர்கள், அலங்காரங்கள் அனைத்தையும் அகற்றுவார்கள்.
நாடளாவிய ரீதியில் இந்த விடயத்தை பக்கச்சார்பற்ற முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தேர்தல்களுக்கு பொறுப்பான தேர்தல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.