இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள் அதிகம் நீர் அருந்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடலில் ஏற்படும் நீரிழப்பில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு பொதுமக்கள் அதிக நீர் அருந்துவது அவசியம் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
காலநிலையில் மாற்றம்
இதேவேளை, தற்போது நிலவும் காலநிலையில் இன்னும் இரு மாதங்களுக்குள் மாற்றம் ஏற்படலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மழையுடனான வானிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, தற்போதைய வெப்பமான காலநிலை காரமணாக சிறுவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் நீரிழப்புக்கு ஆளாக நேரிடும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
களைப்பு, தூக்கம், சோர்வு, தலைவலி, வாந்தி மற்றும் பசியின்மை ஆகியவை நீரிழப்புக்கான அறிகுறிகளாகும். எனவே, நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, பொதுமக்கள் தொடர்ந்து நீர் அருந்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
