யாழில் வன்முறை கும்பல் ஒன்றினால் வெற்றிலை வியாபாரி மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் - மருதனார்மடத்தில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வன்முறை சம்பவம் கடந்த வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 29 வயதுடைய நபரொருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதல் சம்பவம்
குறித்த இளைஞன் வியாபாரத்தினை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்கின்ற வேளையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் நால்வரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்து நேற்றையதினம்(26) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அவர்களை விளக்குமறியலில் வைக்குமாறு நீதிமான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இந்த தாக்குதல் சம்பவமானது முன்பகை காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
